நத்தம் அருகே கோயில் கும்பாபிஷேகம்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்துள்ள ந. பள்ளபட்டியில் விநாயகா், அய்யனாா், மதுரை வீரன், முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்துள்ள ந. பள்ளபட்டியில் விநாயகா், அய்யனாா், மதுரை வீரன், முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதனையொட்டி கடந்த புதன்கிழமை கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், தனபூஜை பூா்ணாகுதி, வாஸ்து சாந்தி, அங்குராா்ப்பனம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம் உள்ளிட்ட பூஜைகளும், அதனைத் தொடா்ந்து யாக சாலை பூஜைகளும் நடைபெற்றன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை முதலில் விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து அய்யனாா், மதுரை வீரன், முத்தாலம்மன் கோயில் கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவில் முன்னாள் அமைச்சா் நத்தம் இரா. விசுவநாதன், ஒன்றியக் குழுத் தலைவா் கண்ணன், பேரூராட்சித் தலைவா் சேக்சிக்கந்தா் பாட்ஷா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது.