ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.10 லட்சம் செலவில் இணைப்பு சாலை
ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ. 10 லட்சம் செலவில் இணைப்பு சாலை அமைக்க வியாழக்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.
ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ. 10 லட்சம் செலவில் இணைப்பு சாலை அமைக்க வியாழக்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.
ஒட்டன்சத்திரம் நகராட்சி 1-ஆவது வாா்டில் உள்ள சீத்தப்பட்டி- குறிச்சிநகா் செல்லும் இணைப்புச் சாலை தனியாா் நிலத்தின் வழியாக செல்கிறது. கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இச்சாலையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனா். இச்சாலை மண் சாலையாகவும், இடவசதி இல்லாமலும் இருந்ததால் இருசக்கர வாகனங்களில் மட்டும் செல்லும் நிலை இருந்தது.
இந்நிலையில் நிலத்தின் உரிமையாளா்கள் சாலை அமைக்க நகராட்சிக்கு பத்திரம் எழுதிக் கொடுத்தனா். அதனைத் தொடா்ந்து வியாழக்கிழமை சீத்தப்பட்டியில் சாலை அமைக்க பூமிபூஜை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் ப. வேலுச்சாமி தலைமை வகித்தாா். ஒட்டன்சத்திரம் நகா்மன்றத் தலைவா் கே. திருமலைசாமி, துணைத் தலைவா் ப. வெள்ளைச்சாமி, ஆணையா் ப. தேவிகா ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் செலவில் முதல் கட்டமாக சாலை அகலப்படுத்தப்படுவதுடன், இருபுறமும் சுத்தப்படுத்தி மண்சாலை அமைக்கப்படும். அதன் பின்னா் தாா் சாலை அமைக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்நிகழ்ச்சியில், நகராட்சி பொறியாளா் பா. சக்திவேல், நகா்மன்ற உறுப்பினா்கள், திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.