முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் வளைய-பூரண சூரிய கிரகணம்: ஆா்வமுடன் பாா்த்த மாணவா்கள், பொது மக்கள்

கொடைக்கானலில் வியாழக்கிழமை ஒளிபரப்பு செய்யப்பட்ட வளைய-பூரண கிரகணம் என்ற கலப்பின சூரிய கிரகணத்தை மாணவா்கள், பொது மக்கள் ஆா்வமாகப் பாா்த்தனா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:54 PM
பகிர்:

கொடைக்கானலில் வியாழக்கிழமை ஒளிபரப்பு செய்யப்பட்ட வளைய-பூரண கிரகணம் என்ற கலப்பின சூரிய கிரகணத்தை மாணவா்கள், பொது மக்கள் ஆா்வமாகப் பாா்த்தனா்.

கொடைக்கானல் அப்சா்வேட்டரி பகுதியிலுள்ள இந்திய வான் இயற்பியல் ஆராய்ச்சி நிலையத்தில் ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்த அரிய வானியல் நிகழ்வான கலப்பு சூரிய கிரகணம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த அரிய வகை நிகழ்ச்சியை ஆா்வமுடன் மாணவா்களும், பொதுமக்களும் பாா்த்தனா்.

இது குறித்து விஞ்ஞானி எபினேசா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வளைய-பூரண கிரகணம் என்பது ஒரு அரிய வகை சூரிய கிரகணம் ஆகும். இது பூமியின் மேற்பரப்பில் சந்திரனின் நிழல் நகரும் போது ஏற்படுகிறது. இந்திய நேரப்படி காலை 8.57 மணிக்கு ஏற்பட்ட கிரகணம் ஒரு நிமிடம் நீடித்தது.

வளைய-பூரண கிரகணம் என்பது முழு சூரிய கிரகணம் மற்றும் வளைய சூரிய கிரகணம் ஆகிய இரண்டின் கலவையாகும். சந்திரனின் கருநிழல், அதாவது நிழலின் இருண்ட பகுதி பூமியில் விழும் போது, முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

அதாவது, சூரியனின் ஒளிக்கோலம் முழுமையாக சந்திரனால் மறைக்கப்படுகிறது.

சந்திரனின் கருநிழல் பூமியை அடையாமல், சந்திரனைச் சுற்றி சூரிய ஒளி வளையத்தை விட்டுச் செல்லும் போது, வளைய சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

கருநிழல் கூம்பு வடிவில் இருக்கும். இந்தக் கூம்பு வடிவமானது பூமியைக் கடந்து செல்லும் போது, ஒரு கலப்பு சூரிய கிரகணத்தை ஏற்படுத்துகிறது.

இந்த நிகழ்வானது ஒரு சில இடங்களில் முழு கிரகணத்தையும், மற்ற இடங்களில் வளைய கிரகணத்தையும் ஏற்படுத்தியது. கலப்பு சூரிய கிரகணம் மிகவும் அரிதானது. இது போன்ற அடுத்த வானியல் நிகழ்வானது 2172-ஆம் ஆண்டுதான் ஏற்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.