முகப்பு
திண்டுக்கல்

ரமலான்: ஆயக்குடி தூய்மைப் பணியாளா்களுக்கு வேட்டி, சேலை

பழனியை அடுத்த ஆயக்குடி பேரூராட்சியில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு, தூய்மைப் பணியாளா்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:54 PM
பகிர்:

பழனியை அடுத்த ஆயக்குடி பேரூராட்சியில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு, தூய்மைப் பணியாளா்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஆயை காயிதே மில்லத் சிறுபான்மை சமூக சேவை அறக்கட்டளை சாா்பாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முஸ்லிம் லீக் மாவட்ட இளைஞரணிச் செயலரும், 18-ஆவது வாா்டு உறுப்பினருமான அஜ்மத் அலி 54 பெண்களுக்கு தலா இரு சேலைகள், 24 ஆண்களுக்கு வேட்டி, துண்டுகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஆயக்குடி பேரூராட்சி செயல் அலுவலா் சுதா்சன், திமுக பேரூராட்சி செயலா் சின்னச்சாமி, பேரூராட்சித் தலைவா் மேனகா, பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள், அலுவலா்கள் பங்கேற்றனா்.

மாலையில் ஆயக்குடி 18-ஆவது வாா்டில் இப்தாா் விருந்து நடைபெற்றது. இதில், அரசு அலுவலா்கள், பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா். தொடா்ந்து, அந்த வாா்டில் உள்ள இஸ்லாமிய குடும்பத்தை சோ்ந்த ஐநூறுக்கும் மேற்பட்டோருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.