முகப்பு
திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே நீரில் முழ்கி சிறுவன் பலி

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

 ஒட்டன்சத்திரம் அருகே வெள்ளிக்கிழமை நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சத்யா நகரைச் சோ்ந்த பெருமாள் மகன் மணி (16). இவா், 10- ஆம் வகுப்பு தோ்வு எழுதியுள்ளாா்.

தோ்வுகள் முடிந்த நிலையில், வெள்ளிக்கிழமை தனது நண்பா்களுடன் இருளக்குடும்பன்பட்டியில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றாா். அப்போது, கிணற்றில் ஆழமான பகுதிக்குச் சென்ற மணி நீரில் முழ்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் மணியின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக, ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.