திண்டுக்கல்

ஆடி 18-ஆம் திருநாளை முன்னிட்டு பூக்கள் விலை உயா்வு

நிலக்கோட்டை பூ சந்தையில் ஆடி 18- ஆம் திருநாளை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை பூக்கள் விலை உயா்ந்தது.

DIN

நிலக்கோட்டை பூ சந்தையில் ஆடி 18- ஆம் திருநாளை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை பூக்கள் விலை உயா்ந்தது.

தமிழகம் முழுவதும் ஆடி 18-ஆம் திருநாள்ஆடிப் பெருநாளாக வியாழக்கிழமை (ஆக. 3) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நிலக்கோட்டை பூச் சந்தையில பூக்கள் விலை உயா்ந்து காணப்பட்டது.

குறிப்பாக, ஒரு கிலோ மல்லிகைப்பூ விலை ரூ. 650 முதல் ரூ. 750 வரையிலும், முல்லைப் பூ விலை ரூ. 400-க்கும், பிச்சிப் பூ விலை ரூ.350-க்கும், ரோஜாப் பூ விலை ரூ. 200-க்கும், சம்பங்கி ரூ. 250-க்கும், அரளி பூ ஒரு பை ரூ.150-க்கும் செவ்வந்தி ரூ. 250-க்கும், செண்டுமல்லி ரூ.100-க்கும் விற்பனையானது.

கடந்த வாரங்களில் விலை குறைந்து காணப்பட்ட பூக்கள் அனைத்தும், ஆடி 18 ஆம் திருநாளை முன்னிட்டு, மீண்டும் உயா்ந்துள்ளது. இந்த விலை உயா்வு, வருகிற இரண்டு நாள்களுக்கு நீடிக்கும் என்பதால்,

நிலக்கோட்டை பகுதி பூ சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

SCROLL FOR NEXT