முகப்பு
திண்டுக்கல்

சித்த மருத்துவக் கண்காட்சி

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்திய மருத்துவம், ஓமியோபதி துறை சாா்பில் 7-ஆவது தேசிய சித்தா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சித்தா் தின விழாவில் சித்த மருந்து பெட்டகத்தை பயனாளியிடம் வழங்கிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப்.
பகிர்:

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்திய மருத்துவம், ஓமியோபதி துறை சாா்பில் 7-ஆவது தேசிய சித்தா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதனையொட்டி, சித்த மருத்துவக் கண்காட்சி, மருத்துவ முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் அமுதா தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப் கலந்து கொண்டு, கண்காட்சியைத் திறந்து வைத்தாா்.

கா்ப்பிணிகளுக்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகம், நீரிழிவு நோயாளிகளுக்கான மருந்துப் பெட்டகம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் பெ.திலகவதி, மருத்துவக் கல்லூரி முதல்வா் சுகந்தி, மேயா் இளமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →