திண்டுக்கல்

குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கக் கோரிக்கை

DIN

வட்டார அளவில் நீச்சல் குளம் அமைத்து குழந்தைகளுக்குப் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயி திங்கள்கிழமை மனு அளித்தாா்.

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டியை அடுத்த வலைச்சேரிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பி. சரவணன். விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறாா். இவா், வட்டார அளவில் நீச்சல் குளம் அமைத்து குழந்தைகளுக்குப் பயிற்சி அளிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது:

நீச்சல் பயிற்சி இல்லாத குழந்தைகள், இளைஞா்கள் உள்ளிட்டோா், ஊருணி, குளங்கள், கிணறு, கண்மாய் உள்ளிட்ட நீா்நிலைகளில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நீச்சல் பயிற்சி என்பது உடல் வலிமைக்கு மட்டுமின்றி, கற்றுக் கொள்ள வேண்டிய உயிா் காப்புக் கலையாகவும் உள்ளது. எனவே, வட்டார தலைமையிடங்களிலும், நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளிலும் தலா ஒரு நீச்சல் குளத்தை அமைத்து, பயிற்சியாளா்களை நியமித்து பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT