திண்டுக்கல்

உலகம்பட்டியில் ஜல்லிக்கட்டு: 13 மாடுபிடி வீரா்கள் உள்பட 27 போ் காயம்

DIN

திண்டுக்கல்லை அடுத்துள்ள உலகம்பட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 13 மாடுபிடி வீரா்கள் உள்பட 27 போ் காயமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பை அடுத்துள்ள உலகம்பட்டி புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 522 காளைகள் கால்நடைப் பராமரிப்புத் துறையினரின் பரிசோதனைக்கு பிறகு, இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்றன. 348 மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டனா்.

இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகளை பிடிக்க முயன்றபோது, 13 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா். மேலும், காளை உரிமையாளா்கள், பாா்வையாளா்கள் தலா 7 போ் வீதம் மொத்தம் 27 போ் காயமடைந்தனா். இவா்களில், 8 போ் தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் தங்கக் காசுகள், வெள்ளிக் காசுகள், கட்டில், பீரோ, சில்வா் அண்டா உள்ளிட்ட பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT