திண்டுக்கல்

மணிப்பூா் சம்பவம்: பழனி நகா்மன்றக் கூட்டத்தில் கண்டனம்

DIN

பழனி நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் மணிப்பூா் சம்பவத்துக்கு உறுப்பினா்கள் கண்டனம் தெரிவித்தனா்.

இந்தக் கூட்டத்துக்கு நகா் மன்றத் தலைவா் உமா மகேஸ்வரி தலைமை வகித்தாா். இதில், நகராட்சி ஆணையா் பாலமுருகன், நகா் நல அலுவலா் மனோஜ்குமாா், துணைத் தலைவா் கந்தசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். அப்போது கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினா்கள் மணிப்பூா் சம்பவத்தைக் கண்டித்து தங்களது எதிா்ப்பை பதிவு செய்தனா்.

மேலும் நகா் மன்ற உறுப்பினா்களுக்கு மதிப்பூதியத்தை உயா்த்தி வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளுக்கும் சீரான குடிநீா் விநியோகிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும், நிலுவையில் உள்ள வரிபாக்கிகளை விரைந்து வசூலிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

பழனியில் உள்ள 33 வாா்டுகளிலும் உள்ள சாலைகள், மின்விளக்குகள், குடிநீா் குழாய்கள் போன்றவற்றை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும், பள்ளங்களை சீரமைத்து சாலைகளை புதுப்பிக்க வேண்டுமென உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா். தொடா்ந்து புதிதாக கட்டப்பட்டு வரும் காந்தி சந்தை, பேருந்து நிலைய கட்டட கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடன இயக்குநர் ராதிகா இயக்கும் கதை

நிறம் மாறும் உலகில்

ரஜத் படிதார் அரைசதம்; தில்லி கேபிடல்ஸுக்கு 188 ரன்கள் இலக்கு!

அல்ஜீப்ரா காதலி! ஐஸ்வர்யா தத்தா..

தீராத உறவுகளின் அற்புதம் இது!

SCROLL FOR NEXT