திண்டுக்கல்

செம்பட்டி அருகேபைக் மீது வேன் மோதல்: பல்கலை. மாணவா் உள்பட 2 போ் பலி

DIN

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் மதுரை காமராஜா் பல்கலை. மாணவா் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

செம்பட்டி அருகே உள்ள ராமநாதபுரத்தைச் சோ்ந்தவா் முருகேசன். இவரது மகன் கபில் கண்ணன் (23). இவா், மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தில் பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா். இதே ஊரைச் சோ்ந்த சத்யா மகன் கோபி (23). இவா், திருப்பூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவா்கள் இருவரும் நண்பா்கள். இந்த நிலையில், ராமநாதபுரத்தில் கடந்த 3 நாள்களாக பகவதியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவுக்காக மதுரையிலிருந்து கபில் கண்ணனும், திருப்பூரிலிருந்து கோபியும் வந்தனா்.

இவா்கள் வெள்ளிக்கிழமை செம்பட்டி- ஒட்டன்சத்திரம் சாலையில் தருமத்துப்பட்டியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் ராமநாதபுரத்துக்கு வந்து கொண்டிருந்தனா். வாகனத்தை கபில் கண்ணன் ஓட்ட, கோபி பின்னால் அமா்ந்து பயணம் செய்தாா். அப்போது செம்பட்டி வழியாக திருப்பூா் சென்ற வேன், ராமநாதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கபில் கண்ணனையும், கோபியையும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா்கள் இருவரும் உயிரிழந்தனா். இதுகுறித்து செம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடரும் ரயில் விபத்துகள்..அப்பாவி மக்களின் உயிருக்கு யார் பொறுப்பு? -ராகுல் கேள்வி

ஊர் சுற்றக் கிளம்பிய சமந்தா!

அணு ஆயுதத்திற்கு ரூ.7.6 லட்சம் கோடி செலவிட்டுள்ள உலக நாடுகள்!

"மோடியை கேலி செய்வதில் எந்த தயக்கமும் இல்லை": கேரள காங்கிரஸ் எக்ஸ் பதிவு!

திசைகளுக்குள் அடங்காத நீர்ப்பெருவெளி: நூல் அறிமுகம் | விமர்சனம்

SCROLL FOR NEXT