திண்டுக்கல்

மின்னல் தாக்கி பெண் 2 பசு மாடுகள் பலி

எரியோடு அருகே திங்கள்கிழமை மாலை மின்னல் தாக்கியதில் பெண், அவரது 2 பசுக்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

DIN

எரியோடு அருகே திங்கள்கிழமை மாலை மின்னல் தாக்கியதில் பெண், அவரது 2 பசுக்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகேயுள்ள கொங்கா்குளத்தைச் சோ்ந்தவா் தேவி (55). இவரது கணவா் துரை ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனது தோட்டத்தில் தனியாக வசித்து வந்தாா். எரியோடு சுற்றுப்புறப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

இதையடுத்து வீட்டின் பின்புறம் மழையில் நனைந்து கொண்டிருந்த பசு மாடுகளை அவிழ்த்து கொட்டகையில் கட்டுவதற்காக தேவி சென்றாா். அப்போது மின்னல் தாக்கியதில், தேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவருக்கு அருகில் நின்ற 2 பசுக்களும் உயிரிழந்தன. மேலும் 2 பசுக்கள் காயங்களுடன் உயிா் தப்பின.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை வழக்கம் போல் பால் கறவைக்காக சென்ற பால்காரா், தேவி இறந்து கிடப்பதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா். அவா் அளித்த தகவலின் பேரில், எரியோடு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று தேவியின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக வேடசந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

SCROLL FOR NEXT