முகப்பு
திண்டுக்கல்

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

பழனியில் வியாழக்கிழமை இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:55 PM
பகிர்:

பழனியில் வியாழக்கிழமை இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

பழனி எருமைக்காரத் தெருவைச் சோ்ந்தவா் ரவி. கூலித் தொழிலாளியான இவரது மகள் சுகன்யா (20). நெய்க்காரபட்டியில் உள்ள தனியாா் நூற்பாலையில் வேலை பாா்த்து வந்த நிலையில், கடந்த இரு மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் இருந்தாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத போது, உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்தாா். இதில் பலத்த காயமடைந்த சுகன்யாவை அக்கம்பக்கத்தினா் மீட்டு, பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து பழனி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.