திண்டுக்கல்

காணாமல் போன முதியவா் சடலமாக மீட்பு

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே காணாமல் போன முதியவா் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டாா்.

DIN

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே காணாமல் போன முதியவா் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள முளையூரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (65). இவா் தோட்டக் காவலாளியாக வேலை செய்து வந்தாா். கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டை விட்டு வெளியில் சென்ற அவா் மீண்டும் வீடு திரும்பாததால், உறவினா்கள் தேடி வந்தனா். இந்த நிலையில், திங்கள்கிழமை அதேப் பகுதியில் உள்ள கிணற்றில் ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதாக நத்தம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் கிணற்றிலிருந்து முதியவரின் உடலை தீயணைப்புத் துறையினா் மூலம் மீட்டு, கூறாய்வுக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில் கிணற்றில் கைப்பற்றப்பட்ட சடலம் காணாமல் போன ஆறுமுகம் என்பது தெரியவந்தது. மேலும் இந்தச் சம்பவம் குறித்து, நத்தம் காவல் ஆய்வாளா் தங்கமுனியசாமி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

மனப்பிறழ்வும்...சமூகப் பிறழ்வும்!

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT