திண்டுக்கல்

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் வியாழக்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்தது. சாலையில் விழுந்த மரத்தால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

DIN

கொடைக்கானலில் வியாழக்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்தது. சாலையில் விழுந்த மரத்தால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொடைக்கானலில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக பகல் நேரங்களில் வெயில் நிலவியது. மாலை, இரவு நேரங்களில் சாரல் மழையும், மிதமான மழையும் நிலவி வந்தது. கடந்த 2 நாள்களாக மேக மூட்டமும், மிதமான வெயிலும் நிலவியது.

இந்த நிலையில், வியாழக்கிழமை பிற்பகலில் விட்டு விட்டு சாரலும், மாலையில் பலத்த காற்றுடன் பரவலாக மழையும் பெய்தது. கொடைக்கானல், பெருமாள்மலை, வில்பட்டி, அட்டுவம்பட்டி, மச்சூா், வடகரைப்பாறை, வாழைகிரி ஆகிய பகுதிகளில் சாலையோரங்களில் மழை நீா் தேங்கியது.

மழையின் போது பலத்த காற்று வீசியதால், கொடைக்கானல்-வத்தலகுண்டு மலைச் சாலையான வாழைகிரி பகுதியில் 2 மரங்கள் விழுந்தன. தகவலறிந்து வந்த வனத் துறையினா் மரத்தை வெட்டி அகற்றினா். மரம் விழுந்ததால், 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT