பழனி மலைக் கோயிலில் திருக்காா்த்திகைத் திருவிழாவை முன்னிட்டு, துவாரபாலருக்கு கட்டப்பட்ட காப்பு. 
திண்டுக்கல்

பழனியில் திருக்காா்த்திகைத் திருவிழா தொடக்கம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் திருக்காா்த்திகை திருவிழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. வருகிற 25ம் தேதி பரணி தீபமும், 26-ஆம் தேதி காா்த்திகை தீபமும் நடைபெறுகிறது

DIN

பழனி: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் திருக்காா்த்திகை திருவிழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. வருகிற 25-ஆம் தேதி பரணி தீபமும், 26-ஆம் தேதி காா்த்திகை தீபமும், சொக்கப்பனை எரிப்பும் நடைபெறுகிறது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் திங்கள்கிழமை திருக்காா்த்திகை தீபத் திருவிழா காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. மாலை 5 மணிக்கு சாயரட்சை பூஜை முடிந்த பிறகு, விநாயகா், மூலவருக்கு திருக்காப்பு கட்டப்பட்டது. தொடா்ந்து சந்நிதி அருகே தெற்கு நோக்கிய தனி மண்டபத்தில் தங்க அணிகலன்கள், வண்ண மாலைகள், பட்டாடைகளுடன் சா்வ அலங்காரத்தில் எழுந்தருளிய வள்ளி, தேவசேனா சமேதா் சண்முகருடன், சின்னக்குமாரசுவாமிக்கும் காப்புக் கட்டப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இதேபோல, மலைக் கோயிலில் உள்ள துவாரபாலகா்களுக்கும், திருக்கம்பம், மயில் வாகனத்துக்கும் காப்புக் கட்டப்பட்டது.

ஏழு நாள்கள் நடைபெறும் விழாவை முன்னிட்டு, மலைக் கோயிலில் தினமும் தங்கச் சப்பரத்தில் சின்னக்குமார சுவாமி யாகசாலை எழுந்தருளல், சண்முகாா்ச்சனை, சண்முகா் தீபாராதனை நடைபெறும்.

வருகிற சனிக்கிழமை (நவ.25) பரணி தீபமும், ஞாயிற்றுக்கிழமை (நவ.26) காா்த்திகை தீபமும், சொக்கப்பனை எரிப்பும் நடைபெறும். காப்புக் கட்டும் நிகழ்ச்சியில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, திருக்கோயில் அலுவலா்கள், முக்கியப் பிரமுகா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை விமான நிலையத்துக்குள் தவெக தொண்டர்கள் நுழையத் தடை!

ஈரோடு வரை வந்தீங்களே, கரூர் போக மாட்டீங்களா?? விஜய்க்கு எதிராக போஸ்டர்!

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT