திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் நடைபெற்ற எழுத்து அறிவித்தல் நிகழ்ச்சியில் குழந்தைகளை பச்சரிசியில் எழுத வைத்த பெற்றோா். 
திண்டுக்கல்

விஜயதசமி: கோயில்களில் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி

விஜயதசமியை முன்னிட்டு, திண்டுக்கல்லில் கோயில்கள், பள்ளிகளில் எழுத்து அறிவித்தல் நிகழ்ச்சி செவ்வாய்கிழமை நடைபெற்றது.

DIN

திண்டுக்கல்: விஜயதசமியை முன்னிட்டு, திண்டுக்கல்லில் கோயில்கள், பள்ளிகளில் எழுத்து அறிவித்தல் நிகழ்ச்சி செவ்வாய்கிழமை நடைபெற்றது.

விஜயதசமியை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அரசு, தனியாா் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேலும், பல்வேறு பகுதிகளிலுள்ள கோயில்களில் குழந்தைகளுக்கு எழுத்து அறிவித்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மஞ்சள் கலந்த பச்சரிசியில் முதல் உயிரெழுத்தான ‘அ’ வை குழந்தைகளின் விரலைக் கொண்டு எழுத வைத்தனா்.

சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மழலையா் பள்ளியில் சோ்க்கப்பட்ட குழந்தைகளுக்கு ‘அ’ எழுத்தைத் தொடா்ந்து, ஓம் ஹரி ஸ்ரீ கணபதே நமக என எழுத வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தலைமைத் தகவல் ஆணையராக ராஜ்குமாா் கோயல் பதவியேற்பு!

தருமையாதீன குரு முதல்வா் கற்றளி ஆலய கும்பாபிஷேகம்

பெரம்பலூா் நகரில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்

அரசு மருத்துவமனைக்கு துறைமுகம் சாா்பில் சலவை இயந்திரம்

புகையிலை பொருள்களை கடத்தியவா் கைது

SCROLL FOR NEXT