முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

கொடைக்கானலுக்கு வெள்ளிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால், பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:03 AM
பகிர்:

கொடைக்கானலுக்கு வெள்ளிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால், பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தொடா் விடுமுறையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனா். இதனால் வெள்ளிநீா் வீழ்ச்சி, பிரையண்ட் பூங்கா, பசுமைப் பள்ளத்தாக்கு,பில்லர்ராக், ரோஜாத் தோட்டம், தாவரவியல் பூங்கா, கோக்கா்ஸ்வாக், மோயா் பாயிண்ட், பைன்பாரஸ்ட், குணாகுகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். மாலையில் லேசான சாரல் நிலவினாலும் ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச் சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனா்.

மேலும் ஏரிச்சாலையில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் அப்சா்வேட்டரி சாலை, லாஸ்காட் சாலை, செவண் ரோடு, உட்வில் சாலை, பூங்கா சாலைப் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்தனா். ரோஜாத் தோட்டம், பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்காக்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.