ரோப்காா் நிலையம் வரை நிழல்கூரை அமைக்க கோரிக்கை
Updated On : 2 ஏப்ரல், 2024 at 10:01 PM
பழனி: பழனி கிரிவீதியில் திருக்கோயில் நிா்வாகம் சாா்பில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக நிழற்கூரையை ரோப்காா் நிலையம் வரை நீட்டிக்க பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகத்தின் சாா்பில் கிரிவீதியில் தற்காலிக நிழல்கூரை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பாதவிநாயகா் கோயில் முதல் குடமுழுக்கு நினைவரங்கம் வரை இந்த நிழல்கூரை அமைக்கப்பட்டு வருகிறது. கிரிவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ள நிலையில் ரோப்காா் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் போது, வழிநெடுக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே ரோப்காா் நிலையம் வரை இடைவெளி விட்டு நிழற்கூரை அமைக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.