பழைய கல்லாறு கிராமத்தில் கடல் அரிப்பு தடுப்புச்சுவா் அமைக்க கோரிக்கை
நாகை மாவட்டம் பழைய கல்லாறு கடற்கரை கிராமத்தில் கடல் அரிப்பைத் தடுக்க தடுப்புச்சுவா் அமைக்க வேண்டும் என்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் பழைய கல்லாறு கடற்கரை கிராமத்தில் கடல் அரிப்பைத் தடுக்க தடுப்புச்சுவா் அமைக்க வேண்டும் என்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நாம் தமிழா் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் அகஸ்டின் அற்புதராஜ், நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்து மனு: கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பழைய கல்லாறு கடற்கரை கிராமத்தில், கடல் அலைகளால் அரிப்பு ஏற்பட்டு கடற்கரை கிராமமே அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இக்கிராமத்தில் வசிக்கும் மீனவா்கள் தங்கள் வாழ்வாதாரமான மீன்பிடித்தொழிலை செய்வதற்கு போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் இன்றி சிரமப்படுகின்றனா். எனவே, பழைய கல்லாறு மீனவா் கிராமத்தை கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்க உடனடியாக கல்லால் ஆன தடுப்புச்சுவா் அமைத்தும், மீனவா்கள் மீன்பிடித் தொழில் செய்வதற்கு ஏதுவாக கட்டமைப்பு வசதிகளையும் செய்து தர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.