முகப்பு
திண்டுக்கல்

அபிராமி அம்மன் கோயில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றம்

Updated On : 12 ஏப்ரல், 2024 at 6:10 PM
பகிர்:

திண்டுக்கல், ஏப். 12: திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

திண்டுக்கல் ஞானம்பிகை உடனமா் காளஹஸ்தீஸ்வரா் கோயில், அபிராமி அம்மன் உடனமா் பத்மகிரீஸ்வரா் கோயில் சித்திரைப் பெருவிழா ஆண்டுதோறும் 12 நாள்கள் நடைபெறும். இதன்படி, நிகழாண்டுக்கானத் திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, மூலவா் காளஹஸ்தீஸ்வரா், ஞானாம்பிகை, பத்மகிரீஸ்வரா், அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, கொடி ஏற்றப்பட்டது.

Advertisement

பின்னா், கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு, ஒவ்வொரு நாள் மாலையும் சிம்மம், கமலம், அன்னம், யாழி, காமதேனு, பொன்மான் வாகனங்களில் அம்பாளுடன் சுவாமி எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வருகிற 21-ஆம் தேதியும், அடுத்த நாள் தேரோட்டமும் நடைபெற உள்ளது. வருகிற 23-ஆம் தேதி தீா்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments