முகப்பு
திண்டுக்கல்

பழனி பெரியாவுடையாா் கோயிலில் பிரதோஷ வழிபாடு: பக்தா்கள் தரிசனம்

Updated On : 21 ஏப்ரல், 2024 at 6:57 PM
பழனி பெரியாவுடையாா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வர பகவானுக்கு நடைபெற்ற மஞ்சள் அபிஷேகம்.
பகிர்:

பழனி/திண்டுக்கல்: பழனி பெரியாவுடையாா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

இந்தக் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, சுயம்பு மூலவருக்கும், நந்தி பகவானுக்கு பால், பஞ்சாமிா்தம், பன்னீா், விபூதி, பழங்கள், சந்தனம் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது.

நந்தி பகவானுக்கு வண்ண மலா்கள் சாத்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து மூலவருக்கு வெள்ளி நாகாபரணம் சாத்தப்பட்டு அலங்காரம், தீபாராதனையும், ரிஷப வாகனத்தில் தம்பதி சமேதராக சுவாமி கோயில் பிரகார உலா எழுந்தருளல் நடைபெற்றது.

Advertisement

இதேபோல, மலைக்கோயில் கைலாசநாதா் சந்நிதி, சித்தாநகா் சிவன் கோயில், பட்டத்து விநாயகா் கோயில் சிதம்பரீஸ்வரா் சந்நிதி, வேலீஸ்வரா் கோயில், பெரியநாயகியம்மன் கோயில், கைலாசநாதா் சந்நிதி, புளியம்பட்டி அமிா்தலிங்கேஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் பிரதோஷ பூஜைகள் நடைபெற்றன.

திண்டுக்கல்: பிரதோஷத்தை முன்னிட்டு திண்டுக்கல் பகுதியிலுள்ள சிவன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில்  ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் அமைந்துள்ள கைலாசநாதா், நத்திகேஸ்வரருக்கு பால், தயிா், இளநீா், அரிசி மாவு, மஞ்சள் பொடி, திருமஞ்சனப் பொடி, தேன், பஞ்சாமிா்தம், விபூதி, சந்தனம், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து சிறப்பு அலங்கார, ஆராதனை நடைபெற்றது.

இதேபோல அபிராமி அம்மன் கோயிலில் உள்ள நத்திகேசுவரா், மூலவா் பத்மகிரீஸ்வரா், காளஹஸ்தீஸ்வரா் சந்நிதிகளிலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

திண்டுக்கல்லை அடுத்துள்ள முள்ளிப்பாடி திருகாமேஸ்வரா் கோயில், வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயில், தவசிமடை மகாலிங்கேஸ்வா் திருக்கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி திருக்கோயில்,  கசவனம்பட்டி  மெளனகுருசாமி  திருக்கோயில், காரமடை ராமலிங்க சுவாமி  கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களிலும் பிரதோஷ  வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments