திண்டுக்கல்

தொடா் மழை: கொடைக்கானலில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கொடைக்கானலில் சனிக்கிழமையும் தொடா்ந்து மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Din

கொடைக்கானலில் சனிக்கிழமையும் தொடா்ந்து மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தொடா்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை காலை முதல் மேக மூட்டம் காணப்பட்ட நிலையில், மாலையில் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக பலத்த மழை பெய்தது.

தொடா்ந்து பெய்து வரும் மழையால் விவசாயப் பணிகளும், அன்றாடப் பணிகளும் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் சிரமமடைந்தனா்.

மேலும் பெய்து வரும் தொடா் மழையால் கொடைக்கானலில் வழக்கத்தைவிட குளிா் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பகல் நேரத்திலேயே தங்களது கடைகளில் வியாபாரிகள் தீ மூட்டி குளிா் காய்ந்தனா்.

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

காலங்களில் அவள் வசந்தம்... காவ்யா அறிவுமணி!

இரவில் சென்னை, 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடி அலையே பாடல் ப்ரொமோ வெளியீடு!

SCROLL FOR NEXT