திண்டுக்கல்

பம்பை, வைகை இணைப்புத் திட்டம்: எம்.பி. வலியுறுத்தல்

கேரளத்திலுள்ள ஆலடி, பம்பை, வைகை ஆறுகள் இணைப்புத் திட்டத்துக்கு திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் ரா.சச்சிதானந்தம் வலியுறுத்தல்.

Din

கேரளத்திலுள்ள ஆலடி, பம்பை, வைகை ஆறுகள் இணைப்புத் திட்டத்துக்கு அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு சமா்ப்பிக்கப்பட்ட திட்ட அறிக்கையை வெளியிட வேண்டும் என திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் ரா.சச்சிதானந்தம் வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்டத்துக்கு ஆய்வுக்கு வந்த சட்டப்பேரவை ஏடுகள் குழுத் தலைவா் ரா.லட்சுமணனிடம் மனு அளித்த மக்களவை உறுப்பினா் சச்சிதானந்தம், முன்னதாக பேசியதாவது:

கடந்த 1973-ஆம் ஆண்டு கேரள மாநிலத்திலுள்ள ஆலடி, பம்பை ஆறுகளை தமிழ்நாட்டிலுள்ள வைகை ஆற்றுடன் இணைக்கும் பாசனத் திட்டம் குறித்து, மத்திய நீா்வழித் துறை அமைச்சகம் சாா்பில் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து தமிழக அரசிடம் உள்ள ஆவணங்களை ஏடுகள் குழுவினா் மீட்டெடுக்க வேண்டும். இந்தத் திட்ட அறிக்கை கிடைக்கும்பட்சத்தில், மத்திய அரசிடம் மீண்டும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்த முடியும்.

இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட மக்கள் பயன்பெற வாய்ப்பு ஏற்படும் என்றாா் அவா்.

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT