பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்தவா் கைது
பழனியில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு தப்பி ஓடிய நபரை பொதுமக்கள் துரத்தி பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
பழனியில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு தப்பி ஓடிய நபரை பொதுமக்கள் துரத்தி பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் திருஆவினன்குடி கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு பெண் ஒருவா் சுவாமி தரிசனம் செய்து விட்டு, வெளியே வந்த போது அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பி ஓடினாா்.
இதையடுத்து, அக்கம் பக்கத்திலிருந்தவா்கள், திருஆவினன்குடி புறக்காவல் நிலையத்தில் இருந்த ஊா்க்காவல் படையினரும் அந்த நபரை துரத்தி சென்று பிடித்து தங்கச் சங்கிலியை மீட்டனா். பிடிபட்ட நபா் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், செட்டித்தெரங்காடு பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் மகேஷ்குமாா் (39) என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.