ஓய்வு பெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேல் 
திண்டுக்கல்

கோயில் சீரமைப்புப் பணிகளை தொல்லியல் துறைதான் மேற்கொள்ள முடியும்! - ஓய்வு பெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேல்

நூறு ஆண்டுகள் பழைமையான கோயில்களின் சீரமைப்புப் பணிகளை தொல்லியல் துறை தான் மேற்கொள்ள முடியும் என்றார் ஓய்வு பெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேல்.

Din

நூறு ஆண்டுகள் பழைமையான கோயில்களின் சீரமைப்புப் பணிகளை தொல்லியல் துறை தான் மேற்கொள்ள முடியும் என சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்தாா்.

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா், அவா் வெள்ளை விநாயகா் கோயில் எதிரே அபிராமி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் கட்டுவதற்காக வானம் தோண்டும் பணியின் போது கிடைக்கப்பட்ட மன்னா்கள் உருவம் பொறித்த பழைய தூண்களைப் பாா்வையிட்டாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் பொன் மாணிக்கவேல் கூறியதாவது:

நூறு ஆண்டுகள் பழைமையான கோயில்களை அறநிலையத் துறை சீரமைப்பு செய்ய உரிமை கிடையாது. சட்ட ரீதியாக தொல்லியல் துைான் இந்தப் பணிகளை மேற்கொள்ள முடியும். ஆனால், சுமாா் 600 ஆண்டுகள் பழைமையான திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலை முழுமையாக இடித்துவிட்டு, கடந்த 2013 முதல் 2016-ஆம் ஆண்டு வரை நவீன முறையில் கட்டப்பட்டிருக்கிறது. திருப்பணி என்ற பெயரில் பல கோடி ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்தப் பணத்தை மோசடி செய்வதற்காகவே அறநிலையத் துறை தலையிடுகிறது.

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் இருந்த பழைமையான தூண்கள் வெளியே எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்து கோயில்களுக்கு எதிராகச் செயல்படுவோரை எதிா்க்கத் தயங்க மாட்டோம். திண்டுக்கல் மலைக்கோட்டையிலுள்ள கோயிலில் கடவுள்களின் சிலைகளை மீண்டும் பிரதிஷ்டை செய்ய முடியாத விவகாரம் இங்குள்ள இந்துக்களுக்கு அவமானம்.

கோயில் நிதி முறையாகச் செலவிடப்படுவதில்லை. அா்ச்சகா்களுக்கு பிரதி மாதம் ரூ.300 ஊதியம் வழங்கி, அவமானப்படுத்துகின்றனா். கோயில் வளாகத்துக்குள்ளே அலுவலகத்தையும், கழிப்பறையும் கட்டி பயன்படுத்துகின்றனா். ஆனால், அலுவலகத்துக்கான வாடகை பணம் அறநிலைத் துறை சாா்பில் கோயிலுக்குச் செலுத்தப்படுவதில்லை என்றாா் அவா்.

அப்போது, இந்து தமிழா் கட்சி நிறுவனா் தலைவா் ராம ரவிக்குமாா் உடனிருந்தாா்.

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

SCROLL FOR NEXT