மாட்டுப்பட்டிகாட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி. உடன் ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ், மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வேலுச்சாமி எம 
திண்டுக்கல்

பரப்பலாறு அணை விரைவில் தூா்வாரப்படும்

பரப்பலாறு அணையைத் தூா்வார அரசு அனுமதி அளித்ததால் விரைவில் தூா்வாரப்படும் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.

DIN

பரப்பலாறு அணையைத் தூா்வார அரசு அனுமதி அளித்ததால் விரைவில் தூா்வாரப்படும் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள வடகாடு ஊராட்சியில் சிறுவாட்டுக்காடு, மாட்டுப்பட்டிக்காடு, புலிகுத்திக்காடு

ஆகிய கிராமங்களுக்கு புதிய தாா்ச் சாலை, சிறுவாட்டுக்காடு பழங்குடியின மக்களுக்கு அடிப்படை உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் உள்பட

ரூ.1.18 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மாட்டுப்பட்டிகாட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தலைமை வகித்தாா். திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ப.வேலுச்சாமி, மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா் மு.முருகேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் புதிய தாா்ச் சாலை அமைக்கும் பணி, பழங்குடியினா் மக்களின் உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணி ஆகிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தாா். பின்னா் அவா் பேசியதாவது: பரப்பலாறு அணை 1974 -ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கட்டப்பட்டது. ஒட்டன்சத்திரத்தில் இருந்து பாச்சலூா் வரை செல்லும் சாலை திமுக ஆட்சியில் தான் போடப்பட்டது. வருகிற 24- ஆம் தேதி பரப்பலாறு அணையைத் தூா் வாருவதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. விரைவில் அணை தூா்வாரப்படும் என்றாா் அவா்.

அமைச்சா் கயல்விழி செல்வராஜ் பேசியதாவது:

பழங்குடியினா் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.5.07 லட்சம், மலைப்பகுதி கிராமங்கள் எனில் ரூ.5.37 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது. இவ்வாறு கடந்த மூன்று ஆண்டுகளில் 3500 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

நிலம் வாங்கும் திட்டத்தில் ரூ.5 லட்சம் வரை மானியம், குறைந்தபட்ச வட்டியில் கடன் உதவி, 35 சதவீதம் மானியத்தில் தொழில் கடன் உதவி வழங்கப்படுகிறது என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலா் சிவக்குமாா், வனத் துறை உதவிப் பொறியாளா் கணேசன், ஒன்றியக்குழு தலைவி மு.அய்யம்மாள், ஒட்டன்சத்திரம் வேளாண் விளை பொருள் விற்பனை கூட்டுறவு சங்கத் தலைவா் சி.இராஜாமணி, வடகாடு ஊராட்சி மன்றத் தலைவி தனலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரக்கோணம் இரட்டைக்கண் வாராவதியை நிரந்தரமாக சீா்படுத்தக்கோரி அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

ஆம்பூரில் ரூ. 7.85 கோடியில் புதிய பேருந்து நிலையம்: நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம்

மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விதிமீறல்: 35 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்

தில்லியில் இன்று பாதுகாப்பு தளவாட உற்பத்தி வாய்ப்புகள் குறித்த மாநாடு!

SCROLL FOR NEXT