உலகம்பட்டியில் ஜல்லிக்கட்டு காளை தாக்கி உரிமையாளர் பலி
உலகம்பட்டியில் ஜல்லிக்கட்டு காளை தாக்கி உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம்பட்டியில் ஜல்லிக்கட்டு காளை தாக்கி உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அடுத்த உலகம்பட்டியில் பழமையான புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு திங்கள் கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 750 காளைகளும், 430 மாடு பிடிவீர்களும் பங்கேற்றுள்ளனர்.
மாடுபிடி வீரர்களுக்கு 20 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் உடல் பரிசோதனை செய்து வாடிவாசலுக்கு அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் 27 பேர் கொண்ட கால்நடை மருத்துவ குழுவினர் காளைகளை பரிசோதித்தனர். மாடு பிடி வீரர்கள் 25 பேர் கொண்ட குழுவாக பிரித்து மொத்தம் 18 குழுக்களாக பிரிந்து வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
கோட்டாட்சியர் கமலக்கண்ணன் கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். இந்த நிலையில் திண்டுக்கல் அடுத்த கொட்டப்பட்டி எஸ். காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த செபஸ்தியார் (27), தனது காளையை ஜல்லிக்கட்டுக்கு அழைத்து வந்தார்.
வேனில் இருந்து அந்த காளையை இறக்கும்போது, எதிர்பாராத விதமாக செபஸ்தியார் மீது காளை முட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.