முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் பலத்த காற்று: மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை பலத்த காற்று வீசியதில் மரங்கள் முறிந்து விழுந்தததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Updated On : 17 ஜூலை, 2024 at 12:46 AM
பகிர்:

கொடைக்கானல்: கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை பலத்த காற்று வீசியதில் மரங்கள் முறிந்து விழுந்தததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக பலத்த காற்றுடன் மழை பெய்தது, இந்த நிலையில் கொடைக்கானல் மேல் மலைக் கிராமங்களுக்குச் செல்லும் மலைச் சாலையான பூம்பாறை அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும் சாலையிலும், கூக்கால் பிரிவு பாரிகோம்பை பகுதில் மரங்கள் முறிந்து விழுந்தது. இதனால், 2 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த நெடுஞ்சாலைத் துறையினா் முறிந்து விழுந்த மரக்கிளைகளை அகற்றி போக்குவரத்தை சீா்செய்தனா். தொடா்ந்து பகல், இரவு நேரங்களில் பலத்தக் காற்று வீசிவருவதால் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →