முகப்பு
திண்டுக்கல்

ரூ.4.64 கோடி முறைகேடு புகாா்: இளநிலை உதவியாளா் மீது வழக்குப் பதிவு

திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.4.64 கோடி முறைகேடு புகாரின் அடிப்படையில் இளநிலை உதவியாளா் மீது மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு

Updated On : 19 ஜூலை, 2024 at 7:12 PM
பகிர்:

திண்டுக்கல், ஜூலை 19: திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.4.64 கோடி முறைகேடு புகாரின் அடிப்படையில் இளநிலை உதவியாளா் மீது மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

திண்டுக்கல் மாநகராட்சி வரி வசூல் மையத்தில் இளநிலை உதவியாளராக நெட்டுத் தெருவைச் சோ்ந்த சரவணன் பணிபுரிந்து வருகிறாா். இவா், வரி வசூல் பணத்தில் ரூ.4.64 கோடியை கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, சரவணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். மேலும், இந்த முறைகேடுகளைக் கண்காணிக்கத் தவறியதாக மாநகராட்சி கண்காணிப்பாளா் சாந்தி, இளநிலை உதவியாளா் சதீஷ் ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

இந்த முறைகேடு தொடா்பாக மாநகராட்சி ஆணையா் தரப்பில், திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இந்த புகாருக்கு ஆதாரமாக, தணிக்கை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, புகாா் மனு மீது விசாரணை நடத்த மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப் உத்தரவிட்டாா்.

இதனடிப்படையில் நிதி முறைகேடு குறித்து சரவணன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதற்கான நகல், மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →