கொடைக்கானலில் காட்டு மாடு தாக்கியதில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பி.டி.சாலையில் வாரச்சந்தை நடைபெற்றது. இந்த சந்தைக்கு ஆனந்தகிரி பகுதியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியா் மூா்த்தி (65) காய்கறிகளைக் வாங்க வந்தாா். அப்போது, அங்கு வந்த காட்டுமாடு அவரைத் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவா் தேனி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
கொடைக்கானல் நகா் பகுதிகளில் காட்டுமாடுகள் நடமாட்டம் அதிகரித்துள்ளன. இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனா். எனவே, நகருக்குள் வரும் காட்டுமாடுகளை வனப் பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.