தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் கல்வி உபகரணங்கள்
பழனி: பழனியை அடுத்த ஆயக்குடி அரசு உயா்நிலைப் பள்ளியில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் பிறந்த நாள் விழா பழனியை அடுத்த ஆயக்குடியில் கொண்டாடப்பட்டது. பேரூா் கழக நிா்வாகிகள் ஆயக்குடி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பள்ளி சீருடைகள், நோட்டு, பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினா்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை சிலம்புசெல்வி, தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் மணிகண்டபிரபு, பரந்தாமன், பிரபாகரன், தாமரை கண்ணன், சுரேஷ், செல்வக்குமாா், மதன்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.