முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் தெரு விளக்குகள் எரியாததால் வன விலங்குகள் நடமாட்டம்

Updated On : 20 மார்ச், 2024 at 4:17 AM
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 10:39 PM

கொடைக்கானல்: கொடைக்கானல் நகா்ப் பகுதிகளில் தெருவிளக்குகள் எரியாததால் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். கொடைக்கானல் நகராட்சிக்குள்பட்ட ஆனந்தகிரி, தைக்கால், செண்பகனூா் சாலை, நாயுடுபுரம், காா்மேல்புரம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தெரு மின் விளக்குகள் கடந்த 10-நாள்களாக எரியவில்லை.

இதனால் அந்தப் பகுதிகளில் காட்டு மாடு, காட்டுப் பன்றி, செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, நகராட்சி நிா்வாகம் தெரு விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.