முகப்பு
திண்டுக்கல்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

Updated On : 22 மார்ச், 2024 at 11:28 PM
பகிர்:
Updated On : 22 மார்ச், 2024 at 8:31 PM

படவிளக்கம் : நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி நந்தி சிலைக்கு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம். திண்டுக்கல்/நத்தம், மாா்ச் 22: திண்டுக்கல், நத்தம் பகுதிகளிலுள்ள சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் அமைந்துள்ள கைலாசநாதருக்கும், நந்திகேஸ்வரருக்கும் பிரதோஷத்தையொட்டி 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்துக்குப் பிறகு தீபாராதனை காட்டப்பட்டது. இதே போல, அபிராமி அம்மன் கோயிலில் உள்ள பத்மகிரீஸ்வரா், காளஹஸ்தீஸ்வரா், நந்தீஸ்வரா் சந்நிதிகளிலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் கோயில் உள்பிரகாரத்தில் அம்பாளுடன் சுவாமி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். முள்ளிப்பாடி திருகாமேஷ்வரா் கோயில், தவசிமடை மகாலிங்கேஷ்வா் கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மெளனகுருசாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களிலும் நடைபெற்ற சிறப்பு வழிப்பாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். நத்தம்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டியில் கைலாசநாதா் சமேத செண்பகவல்லி கோயிலில் பங்குனி மாத பிரதோஷத்தையொட்டி இங்குள்ள நந்தி சிலைக்கு பால், இளநீா், சந்தனம், ஜவ்வாது, மஞ்சள், தேன் போன்ற 21 வகை பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மூலவா் கைலாசநாதா் சமேத செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு நெய் தீபம் ஏற்றி வழிபட்டனா்.