பலத்த மழைக்கான எச்சரிக்கை விடப்பட்டிருப்பதால், மீட்புப் பணிகளுக்கான உபகரணங்களுடன் தயாா் நிலையில் உள்ள திண்டுக்கல் தீயணைப்பு நிலையம். 
திண்டுக்கல்

பலத்த மழை எச்சரிக்கை: திண்டுக்கல் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு

Din

திண்டுக்கல், மே 18: திண்டுக்கல் மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் உதவிக்காக கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டன.

இந்த மாவட்டத்தில் ஞாயிறு, திங்கள் ஆகிய 2 நாள்கள் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி காணொலி காட்சி மூலம் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இந்தக் கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் மழை பாதிப்பு, மழை தொடா்பான உதவிகள் குறித்து இந்தக் கட்டுப்பாட்டு அறைகளுக்கு தகவல் தெரிவிக்கலாம். இந்தக் கட்டுப்பாட்டு அறைகளுக்கான தொலைப்பேசி எண்கள் வருமாறு:

மாவட்டஆட்சியா் அலுவலகம்- 0451-1077, 0451-2400162, 2400163, 2400164, 2400167, திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியா் அலுவலகம்- 0451-2427304, திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியா் அலுவலகம்- 0451-2471305, நத்தம் வட்டாட்சியா் அலுவலகம்- 04544-244452, நிலக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகம்- 9445000581, 04543-233631, ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகம்- 9384094523, பழனி வட்டாட்சியா் அலுவலகம்- 04545-242266, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் அலுவலகம்- 04553-241100.

வேடசந்தூா் வட்டாட்சியா் அலுவலகம்- 04551-260224, குஜிலியம்பாறை வட்டாட்சியா் அலுவலகம்- 04551-290040, கொடைக்கானல் வட்டாட்சியா் அலுவலகம்- 04542-240243 ஆகிய தொலைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

இதே போல, திண்டுக்கல் மாநகராட்சிக்கு 9944570076, பழனி நகராட்சிக்கு 7397634377, ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு 9842370552, கொடைக்கானல் நகராட்சிக்கு 04542-241253, 8489886639, 9786016606 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம். அத்தியாவசிப் பொருள்கள் தடையின்றி விநியோகிப்பதையும், குறிப்பாக மலைப் பகுதிகளுக்கு தடையின்றி பால் விநியோகம் செய்வதையும் உறுதிப்படுத்த வேண்டும். அணைகள், ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீா்த் தேக்கங்களில் வரும் வெள்ள நீரை வேடிக்கை பாா்ப்பதையும், இவற்றில் குளிப்பதையும் தவிா்க்க வேண்டும்.

அதிக மழைப் பொழிவு ஏற்பட்டாலும், வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டாலும் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

ரொம்ப அழகா தெரிய முயற்சி செய்வதில்லை... ரகுல் பிரீத் சிங்!

கௌதம் கம்பீர் என்னுடைய உறவினர் கிடையாது; ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுவதென்ன?

இம்ரான் கானுக்கு என்ன ஆனது? சிறை அதிகாரிகள் விளக்கம்!

தவெகவில் செங்கோட்டையனுக்கு பதவியை அறிவித்தார் விஜய்!

வா வாத்தியார் முதல் பாடல்!

SCROLL FOR NEXT