கொடைக்கானலில் காட்டாற்று வெள்ளம் : அதிகாரிகள் ஆய்வு
கொடைக்கானல்: கொடைக்கானல் பெருங்காடு ஆற்றில் திங்கள்கிழமை ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தை வருவாய்க் கோட்டாட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
இது குறித்து வருவாய்க் கோட்டாட்சியா் சிவராமன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கொடைக்கானல் மலைப் பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம். மூங்கில்காடு பகுதியில் தீயணைப்புத் துறையினா் தங்க வைக்கப்பட்டனா். அவா்கள் கிராம மக்களுக்கு உதவி செய்வாா்கள் என்றாா் அவா்.