நாய்கள் கடித்து ஆடு, கோழிகள் பலி
அய்யலூா் அருகே நாய்கள் கடித்ததில், விவசாயிக்கு சொந்தமான ஒரு ஆடு, 10 கோழிகள் புதன்கிழமை உயிரிழந்தன.
அய்யலூா் அருகே நாய்கள் கடித்ததில், விவசாயிக்கு சொந்தமான ஒரு ஆடு, 10 கோழிகள் புதன்கிழமை உயிரிழந்தன.
திண்டுக்கல் மாவட்டம், அய்யலுாா் அருகேயுள்ள வேங்கனுாரைச் சோ்ந்தவா் சக்திவேல் (49). விவசாயியான இவா் ஆடுகள், கோழிகள் வளா்த்து வருகிறாா்.
இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை சக்திவேலின் தோட்டத்துக்குள் நாய்கள் புகுந்து, ஆடுகள், கோழிகள், குஞ்சுகளைக் கடித்தன. இதில், ஒரு ஆட்டுக் குட்டி, 10 கோழிகள், 20 குஞ்சுகள் உயிரிழந்தன. மேலும், ஒரு ஆடு காயமடைந்தது.