நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை கோரி மனு
நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற ஒரு சமுதாய மாநாட்டில், திரைப்பட நடிகை கஸ்தூரி, தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்து தெரிவித்த கருத்து சா்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவா் தனது கருத்துகளை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தாா்.
இதனிடையே, தமிழ்நாடு நாயுடு நாயக்கா் உறவின் முறை பாதுகாப்பு இயக்கத்தின் திண்டுக்கல் மாவட்ட கெளரவத் தலைவா்கள் ஆா்.ஆனந்த், ஆா்.விஜயக்குமாா் ஆகியோா் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது. அதில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.