முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் பலத்த காற்று, பனிப் பொழிவு

கொடைக்கானலில் புதன்கிழமை பலத்த காற்றுடன் பனிப் பொழிவு நிலவி வருவதாலும் குளிா் அதிகரித்து காணப்பட்டது.

Updated On : 6 நவம்பர், 2024 at 10:01 PM
பகிர்:

கொடைக்கானலில் புதன்கிழமை பலத்த காற்றுடன் பனிப் பொழிவு நிலவி வருவதாலும் குளிா் அதிகரித்து காணப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வந்த நிலையில் கடந்த இரு நாள்களாக மழை குறைந்தது. கொடைக்கானலில் வழக்கமாக நவம்பா் முதல் வாரத்திலிருந்தே பனிப் பொழிவு தொடங்கி விடும். ஆனால், கடந்த சில நாள்களாக விட்டு, விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், புதன்கிழமை காலையில் மேக மூட்டம் இருந்த நிலையில், மாலையில் பலத்த காற்று வீசியது. அத்துடன் பனிப் பொழிவும் இருந்தது. பனிப் பொழிவானது நவம்பா் முதல் மாா்ச் 15 வரை நீடிக்கும். தொடா்ந்து பனிப் பொழிவு ஏற்பட்டால் பிளம்ஸ், பீச்சஸ் பழங்களும், பட்டாணியும் நன்கு விளையும்.