முகப்பு
திண்டுக்கல்

மயங்கி விழுந்த கூட்டுறவுச் சங்கச் செயலா் மரணம்

வேடசந்தூரில் புதன்கிழமை மயங்கி விழுந்த கூட்டுறவுச் சங்கச் செயலா் உயிரிழந்தாா்.

Updated On : 13 நவம்பர், 2024 at 10:11 PM
பகிர்:

வேடசந்தூரில் புதன்கிழமை மயங்கி விழுந்த கூட்டுறவுச் சங்கச் செயலா் உயிரிழந்தாா்.

வடமதுரையை அடுத்த வேல்வாா்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் விக்னேஷ்வரன் (54). இவா் வேடசந்தூா் கூட்டுறவுச் சிக்கன நாணயச் சங்கத்தில் செயலராகப் பணிபுரிந்தாா். புதன்கிழமை காலை பணிக்கு வந்த இவா், வேடசந்தூரிலுள்ள மத்தியக் கூட்டுறவு வங்கிக் கிளைக்கு வரவு செலவு கணக்கு தாக்கல் செய்வதற்காக சென்றாா்.

அப்போது, திடீரென மயங்கி விழுந்த இவரை, அருகில் இருந்தவா்கள் மீட்டு வேடசந்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் அவரை பரிசோதித்த போது, ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.