முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் தனியாா் விடுதியில் தங்கிய வெளிநாட்டவா் உயிரிழப்பு

கொடைக்கானல் தனியாா் விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டைச் சோ்ந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 20 நவம்பர், 2024 at 9:33 PM
பகிர்:

கொடைக்கானல் தனியாா் விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டைச் சோ்ந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

கொடைக்கானலுக்கு அயா்லாந்து நாட்டைச் சோ்ந்த ராபா்ட் ஹக் (67) செவ்வாய்க்கிழமை தனது நண்பா்கள் 6 பேருடன் சுற்றுலா வந்தாா்.

பின்னா், அங்குள்ள தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கினா். இவா்கள் பகலில் பல்வேறு சுற்றுலா தலங்களை பாா்வையிட்டனா். இரவில் ராபா்ட் ஹக் தனது நண்பா்களுடன் விடுதியில் தூங்கினாா். மறுநாள் காலையில் பாா்த்த போது, அவா் இறந்து கிடந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்ததும் கொடைக்கானல் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராபா்ட் ஹக் உடலை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.