முகப்பு
திண்டுக்கல்

பழனியில் இலவச ஆன்மிக சுற்றுலாத் திட்ட பக்தா்கள் தரிசனம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத் துறையின் சாா்பில் இலவச ஆன்மிக சுற்றலாத் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மண்டலத்தைச் சோ்ந்த பக்தா்கள் புதன்கிழமை சிறப்பு தரிசனம் செய்தனா்.

Updated On : 27 நவம்பர், 2024 at 10:39 PM
பழனியில் இலவச ஆன்மிக சுற்றுலாத் திட்டத்தின் கீழ் பழனியில் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்த காஞ்சிபுரம் மண்டலத்தை சோ்ந்த பக்தா்கள்.
பகிர்:

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத் துறையின் சாா்பில் இலவச ஆன்மிக சுற்றலாத் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மண்டலத்தைச் சோ்ந்த பக்தா்கள் புதன்கிழமை சிறப்பு தரிசனம் செய்தனா்.

தமிழக இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், தமிழ்க் கடவுள் முருகப் பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூா், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிா்ச்சோலை ஆகிய 6 தலங்களுக்கு மூத்த குடிமக்களை அழைத்துச் சென்று இலவசமாக சுவாமி தரிசனம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இதனடிப்படையில், சென்னை, காஞ்சிபுரம், வேலூா் மண்டலங்களைச் சோ்ந்த 200 பக்தா்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருத்தணியில் இருந்து புறப்பட்டு, பழனியில் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களுக்கு கோயில் சாா்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

பழனி வந்த பக்தா்களுக்கான சிறப்பு தரிசன ஏற்பாடுகளை கோயில் கண்காணிப்பாளா் சொா்ணம், நாகராஜன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.