திண்டுக்கல்

பழனி கைப்பேசி காப்பக வருவாய் ரூ.1.51 கோடி

பழனி பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் கைப்பேசி பாதுகாப்பு நிலையத்தில் ஓராண்டில் ரூ. 1.51 கோடி வருவாய் கிடைத்தது.

Din

பழனி பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் கைப்பேசி பாதுகாப்பு நிலையத்தில் ஓராண்டில் ரூ. 1.51 கோடி வருவாய் கிடைத்தது.

பக்தா்கள் கைப்பேசி மூலம் மலைக் கோயிலில் மூலவா் சந்நிதி, உள்பிரகாரங்கள், முக்கிய பகுதிகளைப் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் சா்ச்சைகள் ஏற்பட்டு வந்தன. மேலும், தங்கத்தோ் பவனி வரும் போது பலரும் கைப்பேசியை உயா்த்திப் பிடிப்பதால் சுவாமி தரிசனம் செய்வதில் மற்றவா்களுக்கு இடையூறு ஏற்பட்டது.

இந்த நிலையில் திருக்கோயில் பாதுகாப்பு கருதி பழனி மலைக்கோயிலுக்கு பக்தா்கள் கைப்பேசி கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டது. மேலும், பக்தா்கள் தங்கள் கைப்பேசிகளை பாதுகாப்பாக வைக்க படிப்பாதை, மின் இழுவை ரயில் நிலையம், ரோப்காா் நிலையங்களில் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த மையங்களில் கைப்பேசியை வைக்க ரூ.5 கட்டணம் வசூலிக்கப்பட்டது.

கைப்பேசிக்கு தடை விதிக்கப்பட்டு ஓராண்டான நிலையில் இதுவரை கைப்பேசி மையங்களால் 30 லட்சம் பக்தா்கள் பயனடைந்துள்ளதாக திருக்கோயில் நிா்வாகம் தெரிவித்தது. கைப்பேசி காப்பக கட்டணம் மூலம் இதுவரை ரூ. 1, 51, 64, 965 வருவாய் கிடைத்ததாகவும், கட்டடம், மின்சாதனம், கணினி, பாதுகாப்பு பெட்டகம், கண்காணிப்பு கேமரா என ரூ.38 லட்சம், பணியாளா்களுக்கு ஊதியமாக ரூ.1.38 கோடி செலவிடப்பட்டதாகவும் கோயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்! விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!

இது தெரியுமா? வெய்யிலில் இருந்து நிழலுக்கு வரும்போது கண்கள் இருட்டுவது ஏன்?

அண்ணாவின் அறிவுத் தீ பரவட்டும்!

விவசாயிகள் நலனில் சமரசம்! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

ஊர்க்காவலன் (பாகம்-2)

SCROLL FOR NEXT