முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் ஆபத்தான முறையில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள்

கொடைக்கானல் மலைச் சாலையில் வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Updated On : 9 அக்டோபர், 2024 at 9:11 PM
கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி மலைப் பகுதியில் காா் கதவில் அமா்ந்து ஆபத்தான முறையில் சென்ற சுற்றுலாப் பயணி.
பகிர்:

கொடைக்கானல் மலைச் சாலையில் வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனா். இந்த நிலையில், இங்கு வரும் இளைஞா்கள் வாகனத்தின் கதவுகளில் அமா்ந்து வெளியே பாா்த்தபடியும், சப்தமிட்டும் செல்கின்றனா். இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, கொடைக்கானல் மலைச் சாலையில் விதிமுறைகளை மீறிச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.