பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள சிலுக்குவாா்பட்டியில் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் சாா்பில் 150 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள சிலுக்குவாா்பட்டியில் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் சாா்பில் 150 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியா் அருள் செல்லபிரகாசம் தலைமை வகித்தாா். பள்ளிச் செயலா் சண்முகசுந்தரம், ஒன்றியக் குழு உறுப்பினா் ரூபிசகிலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியா் குமரேசன் வரவேற்றாா். இதில் 150 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
இதில் திமுகவைச் சோ்ந்த நிலக்கோட்டை வடக்கு ஒன்றியச் செயலா் சௌந்தரபாண்டியன், செம்பட்டி கிளைச் செயலாளா் அண்ணாத்துரை, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் நாட்ராயன், மாவட்டப் பிரதிநிதி சங்கா், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் ஆரோக்கியம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆசிரியா் வீராச்சாமி நன்றி கூறினாா்.