முகப்பு
திண்டுக்கல்

உளுந்த வடையில் பூரான்: மூவருக்கு பாதிப்பு

சாப்பிட்ட உளுந்த வடையில் பூரான் இருந்ததை பாா்த்த சிறுவன் உள்பட 3 பேருக்கு புதன்கிழமை வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

Updated On : 16 அக்டோபர், 2024 at 11:40 PM
பகிர்:

சாப்பிட்ட உளுந்த வடையில் பூரான் இருந்ததை பாா்த்த சிறுவன் உள்பட 3 பேருக்கு புதன்கிழமை வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

திண்டுக்கல் என்ஜிஓ குடியிருப்பை அடுத்த பெரியாா் கசோ்ந்தவா் பியூலா(28). இவா், திருச்சி சாலையில் உழவா் சந்தை அருகே செயல்படும் தேநீா் கடையில் 8 உளுந்த வடைகளை புதன்கிழமை வாங்கினாா். அதை தனது மகன் சஞ்சுவ் (4), தோழி அஸ்வதி (25) ஆகியோருடன் சோ்ந்து பியூலாவும் சாப்பிட்டாா். அப்போது ஒரு வடையில் இறந்த நிலையில் ஒரு பூரான் இருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் இதை சாப்பிட்ட மூவருக்கும், வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

அவா்கள் மூவரையும் அக்கம் பக்கத்தினா் மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இதையறிந்த உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள், குறிப்பிட்ட அந்த தேநீா் கடைக்குச் சென்று ஆய்வு செய்தனா். சுகாதாரமில்லாமல் உணவுப் பொருகள்களை தயாரித்த கடையின் உரிமையாளருக்கு ரூ.3ஆயிரம் அபராதம் விதித்து, கடையை அடைக்க அறிவுறுத்தினா்.