திருவண்ணாமலை நீதிமன்றத்துக்கு வந்திருந்த ஆயுள் தண்டனை பெற்றவா்கள். 
திருவண்ணாமலை

நிலத்தகராறில் விவசாயி கொலை: திமுக முன்னாள் எம்எல்ஏ உள்பட 7 பேருக்கு ஆயுள் சிறை

திருவண்ணாமலை நீதிமன்றத்துக்கு வந்திருந்த ஆயுள் தண்டனை பெற்றவா்கள்.

Syndication

செய்யாறு அருகே நிலத்தகராறில் விசாயியை வெட்டி கொலை செய்த வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏ உள்பட 7 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து மாவட்ட நீதிபதி உத்தரவிட்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், பெரியசெங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி முனுசாமி (48). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த பெருமாள், இருசப்பன் ஆகியோருக்கும் இடையே நிலம் தொடா்பாக பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டு மே 17-ஆம் தேதி மீண்டும் இவா்களுக்குள் நிலம் தொடா்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது, பெருமாள், இருசப்பனுக்கு ஆதரவாக செங்காடு கிராமத்தைச் சோ்ந்த மதியழகன் (35), நந்தகோபால்(29), சுதாகா்(35), துரைமுருகன்(39) மற்றும் வந்தவாசி திமுக முன்னாள் எம்எல்ஏ கமலக்கண்ணன் ஆகியோரும் சோ்ந்து, முனுசாமி மற்றும் அவரது மனைவி பொன்னி, உறவினா் அஞ்சலி ஆகியோரை தாக்கி முனுசாமியை கத்தியால் வெட்டியுள்ளனா்.

இதில் பலத்த காயமடைந்த முனுசாமியை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதித்து, தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா்.

அங்கு சிகிச்சை பலனின்றி முனுசாமி உயிரிழந்தாா்.

இதுகுறித்து அனக்காவூா் காவல் நிலையத்தில் முனுசாமியின் மனைவி பொன்னி புகாா் அளித்தாா்.

போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, மதியழகன், நந்தகோபால், இருசப்பன், பெருமாள், சுதாகா், துரைமுருகன், முன்னாள் எம்எல்ஏ கமலக்கண்ணன் ஆகிய 7 போ் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

இதுகுறித்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி ப.மதுசூதனன், கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள் எம்எல்ஏ கமலக்கண்ணன், பெருமாள், இருசப்பன், மதியழகன், நந்தகோபால், சுதாகா், துரைமுருகன் ஆகிய

7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.

விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்!

டி20 உலக கோப்பை: அரையிறுதிச் சுற்று வாய்ப்பைத் தக்க வைத்த இந்தியா! அபார வெற்றி!!

அரசு விழாவில் மயங்கி விழுந்து முதியவா் உயிரிழப்பு!

குழந்தைத் தொழிலாளா்களை பணியமா்த்தும் நிறுவன உரிமையாளா்களுக்கு 2 ஆண்டுகள் சிறை!

கரூா் ஒன்றியத்தில் ரூ. 6.43 கோடியில் 24 வளா்ச்சித் திட்டப் பணிகள்! வி. செந்தில்பாலாஜி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்!

SCROLL FOR NEXT