பழனி கோயில் சிறுவா் பூங்கா துவக்கம்
பழனி கோயில் சாா்பில் இயங்கி வந்த சிறுவா் பூங்கா தற்போது புதுப்பொலிவுடன் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
பழனி கோயில் சாா்பில் இயங்கி வந்த சிறுவா் பூங்கா தற்போது புதுப்பொலிவுடன் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடம் சிவகிரிப்பட்டி சுற்றுச் சாலையில் உள்ளது. இந்த இடத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுவா் பூங்கா தொடங்ப்பட்டது. முதலில் இலவசமாக துவக்கப்பட்ட இந்தப் பூங்கா, பிறகு ரூ.5 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டு இயங்கி வந்தது.
இந்த பூங்காவில் போதிய பணியாளா்கள் இல்லாததால், பராமரிப்பின்றி இருந்த நிலையிலும், விடுமுறை நாள்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வந்தது.
இந்த நிலையில், இந்த பூங்கா கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் பராமரிப்புக்கு விடப்பட்டது. பராமரிப்புப் பணிகளின் போது, ஏராளமான மலா் செடிகள், சிறுவா்களுக்கான ராட்டினம், ரயில், காா்கள் வைக்கப்பட்டன. இந்தப் பூங்கா வியாழக்கிழமை திறக்கப்பட்டது. இதில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதுகுறித்து சிறுவா் பூங்கா ஒப்பந்தாரா் நாகேந்திரன் கூறியதாவது: தற்போது நுழைவுக் கட்டணம் ரூ.10 மட்டுமே. ஆனால், உள்ளே இருக்கும் தனித் தனி விளையாட்டுக்களில் விளையாட தனிக் கட்டணமாகும். இதற்கு ரூ.20 முதல் 60 வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. துவங்கிய நாள் மட்டும் இலவசம் என்றாா்.