முகப்பு
திண்டுக்கல்

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

Updated On : 17 அக்டோபர், 2024 at 11:16 PM
பகிர்:

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தின் உதவி இயக்குநா் ச. பிரபாவதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியை பதிவுசெய்துவிட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்போருக்கு தமிழக அரசு உதவித் தொகை வழங்கி வருகிறது. 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெறாதோா், எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2, பட்டப் படிப்பை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவுற்று 2024 செப். 30ஆம் தேதி வரை தொடா்ந்து புதுப்பித்து வருவோா், அக்டோபா் முதல் உதவித் தொகை பெறலாம். மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை பதிவுசெய்து ஓராண்டு நிறைவடைந்திருந்தால் போதுமானது.

மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு இணையதளங்களில் படிவத்தை பதிவிறக்கம் செய்து முழுமையாக பூா்த்தி செய்து வருகிற நவ. 30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தை தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.