முகப்பு
திண்டுக்கல்

பழனி மலைக் கோயில் ராஜகோபுரத்துக்கு இலகு குடமுழுக்கு

பழனி மலைக் கோயிலில் உள்ள ராஜகோபுரத்தில் சேதமடைந்த பகுதி சீரமைக்கப்பட்டு, வியாழக்கிழமை இலகு குடமுழுக்கு நடைபெற்றது.

Updated On : 24 அக்டோபர், 2024 at 10:49 PM
பழனி மலைக்கோயில் ராஜகோபுரம் சீரமைக்கப்பட்டு, வியாழக்கிழமை நடைபெற்ற இலகு குடமுழுக்குக்கான கலச புறப்பாடு.
பகிர்:

பழனி மலைக் கோயிலில் உள்ள ராஜகோபுரத்தில் சேதமடைந்த பகுதி சீரமைக்கப்பட்டு, வியாழக்கிழமை இலகு குடமுழுக்கு நடைபெற்றது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. அண்மையில் மலைக் கோயிலில் உள்ள ஐந்து அடுக்கு ராஜகோபுரத்தில் மேலே உள்ள யாழி பகுதியின் சுதை பகுதி உடைந்தது. இதையடுத்து, ராஜகோபுரத்தின் உடைந்த சுதைப் பகுதியை ஸ்தபதிகளால் சீரமைக்கப்பட்டு, வியாழக்கிழமை இலகு குடமுழுக்கு நடைபெற்றது.

முன்னதாக, கோபுர கலசங்களுக்கு யாக குண்டத்தில் மூலிகைகள், தங்கம், பட்டு உள்ளிட்ட பொருள்களை இட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, யாக சாலையில் வைத்திருந்த தீா்த்தம் நிரம்பிய கலசங்கள் கோயிலை வலம் வர செய்து, மேளதாளம் முழங்க ராஜகோபுரத்தின் உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னா், வேதமந்திரங்கள் முழங்க சிவாசாரியா்கள் கோபுர கலசங்களுக்கு தீா்த்தத்தை ஊற்ற இலகு குடமுழுக்கை நடத்தினா். இதைத் தொடா்ந்து, கலசங்களுக்கும், சுதைகளுக்கும் தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.